"இந்த யுகத்தில் இறைவன் படைத்த இணையற்ற படைப்பு என்று ஒன்று உண்டென்றால் அது நேரு என்றே சொல்லலாம்"
- அட்லாய் ஸ்டீவன்" அமெரிக்க நாட்டு மேதை
"நேரு பளிங்கு போல் பரிசுத்தமானவன்! ஐயத்திற்கு இடமின்றி அவர் சத்யவான்; வீரர்களுக்கோர் இலக்கணமானவர்! அவருடைய பொறுப்பில் இந்தத் தேசம் பாதுகாப்பாக இருக்கும்!"
- அண்ணல்காந்தி
"புத்தரைப் போன்றவர் மகாத்மா காந்திஜி என்றால் அசோகனைப் போன்றவர் ஜவஹர்லால் நேரு"
- சஞ்சீவ் ரெட்டி (முன்னாள் இந்திய ஜனாதிபதி )
"நேருஜி பெரிய சிந்தனையாளர். புதிய சிந்தனையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மக்களிடம் பரப்பினர். அவருடைய துடிப்பும் எண்ணமும் இலட்சிய நோக்கும் நாம் இன்னும் நினைத்தால் உணர்ச்சிதரக் கூடியவை"
- காமராஜர்
"பாரதத்தின் அரியாசனம் ஜவஹர்லாலுக்கே உரியது என்பதில் சந்தேகமில்லை. அவருடைய வாழ்வு ராஜகம்பீரமானது. அவரது உறுதி அசையாதது. அவரது தீரம் பின்வாங்காதது!"
- மகாகவி தாகூர்
"பண்டிட்ஜியின் மிகப்பெரிய சாதனை இந்து முஸ்லிம் வேறுபாடற்ற சமுதாயமாக இந்தியர்களை ஒருமைப்படுத்தியது என்றுதான் வரலாறு குறிப்பிடும். மதச் சார்பற்ற சர்க்காரை உருவாக்கி எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது அவருடைய செயலாற்றும் சக்திகோர் எடுத்துக்காட்டு."
- மௌன்ட்பேட்டன்
"போதிமரப் புத்தன் போய்விட்டான் என்றிருந்தோம் பாதிவழி போன அவன் பண்டிதனாய் திரும்பி வந்தான் ஆதிமகன் ஏசுபிரான் அடங்கிவிட்டான் என்றிருந்தோம் தாவியவன் பாரத்தில் ஜவஹர்லால் ஆக வந்தான்"
- கவியரசு கண்ணதாசன்
"அச்சமென்பது அறவே இல்லாத அற்புதமான மனிதர் ஜவஹர்லால் நேரு."
- வின்ஸ்டண்ட் சர்ச்சில்
"நேரு மனிதத்தன்மை மிக்கவர். அதனால்தான் அவரை உண்மையாக அறிந்த எல்லோரும் நேசிக்கிறார்கள்."
- விஜயலட்சுமி பண்டிட்
"நமது தலைமுறையின் மிகப்பெரிய தலைவர் ஜவஹர்லால் நேரு. தன்னிகரற்ற அரசியல் அறிஞராக அவர் விளங்கினார். மனித இனத்தின் சுதந்திரத்திற்காக அவர் செய்த சேவை மறக்க முடியாதது."
- டாட்டர். எஸ். ராதாகிருஷ்ணன்
"இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்து அதன்மமூலம் உலகத்தின் தலைவிதியை நிர்ணயித்த ராஜதந்திரி நேரு."
- டிகாலே (பிரான்ஸ் அதிபர்)
"கிழக்கையும் மேற்கையும் இணைத்த வல்லமை மிக்க தேசத் தலைவர் நேரு."
- அட்லி (பிரிட்டன் பிரதமர்)
"தனது குணநலன்களின் காந்த சக்தியை உலகெங்கும் பரப்பி உலக மக்களைக் கவர்ந்த தலைவர் நேரு."
- லுட்சிக் எர்ராட் (மே. ஜெர்மன் தலைவர்)
"போறும் பூசலும் அற்ற ஓர் உலகத்தை உருவாக்குவது தான் நேருவுக்கு நாம் அமைக்கும் நினைவுச்சின்னமாகும்."
- ஜான்சன் (முன்னாள் அமெரிக்க அதிபர்)
No comments:
Post a Comment